திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த துணை சபாநாயகர்
திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து துணை சபாநாயகர் பிச்சாண்டி வாக்கு சேகரித்தார்.
வேட்பாளர் அண்ணாதுரை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி துணை சபாநாயகர் பேசியதாவது.
தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக உள்ளது. மற்ற கூட்டணிகள் எல்லாம் பிரிந்து உள்ளது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் மோடி 35 சதவீதம் வாக்குகளை பெற்றார்.
எதிர்க்கட்சிகள் 65 சதவீதம் வாக்குகளை பெற்றது. தற்போது அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து 65 சதவீதம் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும் என்பதால் இந்தியா கூட்டணி தான் இந்தியாவை ஆளப்போகிறது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை சிமெண்ட் சாலை ,தெரு விளக்கு உட்பட அனைத்து திட்டங்களையும் செய்து தந்துள்ளார், இந்த முறை வெற்றி பெறச் செய்தால் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார் எனவே அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் . உங்களது பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.
தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை பேசுகையில்,
முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த வளர்ச்சியும் பெறவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தது. அது அதிமுக ஆட்சியில் 18-வது இடத்துக்கு சென்றது.
தற்போது தமிழகத்தை முதலிடம் பெறும் வகையில் ஒரு முன்னோடி மாநிலமாக முதலமைச்சர் மாற்றி இருக்கிறார். ஏழைகள் மற்றும் தாய்மார்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சாதனைகளை எல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்துக் கூறி என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர் அண்ணாதுரை பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது நகர திமுக செயலாளர் அன்பு, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர்கள் ,துணைத் தலைவர்கள், நிர்வாகிகள் ,கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக வட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu