கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துணை சபாநாயகர் வாக்கு சேகரிப்பு

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துணை சபாநாயகர் வாக்கு சேகரிப்பு
X

திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து வாத்து சேகரித்த துணை சபாநாயகர் பிச்சாண்டி

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள இனாம்காரியந்தல், மல்லவாடி, மருத்துவம் பாடி, சொர குளத்தூர், ஆர்ப்பாக்கம் ,பூதமங்கலம் ,வேடந்தவாடி , ஆகிய ஊராட்சிகளில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது .அதில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரேஷன் கடைகள் ,அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்கள், புதிய தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை வசதிகள், பயனியர் நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது.

மேலும் மகளிர் குழுக்களுக்கு வட்டி இல்லா கடன் ரூபாய் ஒரு லட்சம் வழங்க உள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு வட்டி இல்லா கடன் உதவி ரூபாய் 4 லட்சம் வழங்க இருக்கிறது. மேலும் 100 நாள் திட்டத்தில் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தி அதன் ஊதியம் ரூபாய் 400 ஆக உயர்த்தி வழங்க இருக்கிறது.

சிலிண்டர் ரூபாய் 500 க்கு வழங்க இருக்கிறது. இத்தனை திட்டங்களும் சலுகைகளும் திமுக கூட்டணியாக உள்ள இந்தியா கூட்டணி கட்சிக்கு முழு ஆதரவளித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி பெற ஆதரியுங்கள் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து வேளானந்தல், செல்லங்குப்பம் , உள்ளிட்ட ஊராட்சி பகுதியிலும் சாலையனூர் ஊராட்சியில் சேப்பங்கிழங்கு தோட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியர் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story