2026 தேர்தலில் 200 தொகுதிகளை வென்றெடுக்க களப்பணி ஆற்றிட துணை சபாநாயகர் வேண்டுகோள்!

2026 தேர்தலில் 200 தொகுதிகளை வென்றெடுக்க களப்பணி ஆற்றிட துணை சபாநாயகர்  வேண்டுகோள்!
X

நிகழ்ச்சியில் பேசிய துணை சபாநாயகர்

2026 தேர்தலில் 200 தொகுதிகளை வென்றெடுக்க களப்பணி ஆற்ற வேண்டும் என செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் துணை சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட கவுன்சிலர் ,ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒன்றிய பொருளாளர் சுப்பராயன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் களப்பணியாற்றி அதிக வாக்குகளை பெற்று தந்துள்ளனர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை நாம் வென்றெடுக்க வேண்டும் , எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் களப்பணிகளை இப்பொழுதே தொடங்கிட வேண்டும் இந்தப் பகுதியில் வாக்காளர்களை அதிக அளவில் சேர்த்திட வேண்டும். நமது அரசின் திட்டங்களை வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

தற்போது திமுக அரசு பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை அளித்து தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருவதை பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் தமிழக முழுவதும் கிராமங்களில் உள்ள கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றி கட்டித்தரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இத்திட்டத்தை பயன்கள் குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கான நவம்பர் நடைபெற உள்ளது அந்தந்த பகுதியில் உள்ள கழக நிர்வாகிகள் வாக்கு மையங்களுக்கு சென்று சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, புதிய உறுப்பினர்களின் பெயர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் , கிளை கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!