இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்: பேரவை துணைத்தலைவர் வழங்கினார்

இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்: பேரவை துணைத்தலைவர் வழங்கினார்
X
இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பேரவை துணைத்தலைவர், மழைநீர் தேங்கியபகுதிகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி தள்ளாம்பாடி எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு பகுதி மற்றும் பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி,வழங்கினார்.

மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும் மற்றும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை உடனடியாக சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் நார்த்தாம்பூண்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மனு அளித்த மக்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்து சான்றிதழ்களை வழங்கினார்.

வேட்டவலம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியார் தெரு மற்றும் நேரு தெருவில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி வேளானந்தல் கிராமத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமினை நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags

Next Story
ai future project