திருவண்ணாமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை துணை சபாநாயகர் ஆய்வு

திருவண்ணாமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை துணை சபாநாயகர் ஆய்வு
X

தடுப்பூசி முகாமில் துணை சபாநாயகர் பிச்சாண்டி

இன்று நடைபெற்று கொண்டிருக்கும் மாபெரும் தடுப்பூசி முகாமினை சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் 6வது மாபெரும் தடுப்பூசி முகாமினையொட்டி கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஐங்குணம் மற்றும் கானலாப்பாடி ஊராட்சிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, அங்கு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்