புதிய பள்ளி கட்டுமான பணிகளுக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி அடிக்கல்
புதிய பள்ளி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மங்கலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டுமான பணிகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம் , ஒன்றிய குழு உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சசி கலை அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி , பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசியதாவது.
இந்த மங்களம் ஊராட்சியில் சென்ற முறை நான் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்க வந்தபோது பள்ளி தலைமை ஆசிரியரும் ,ஆசிரியர்களும் ,மாணவர்களும், எங்களுக்கு புதிய பள்ளி கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டும் என கேட்டிருந்தனர்.
அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.56 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் இப்போது பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் படிக்கும் மாணவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, இலவச பேருந்து பயணம், இலவச கல்வி கற்றல் கற்பித்தல் ,நான் முதல்வன் ,புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கி வருகிறார்.
இத்திட்டத்தில் சுமார் 2.73 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் மாணவர்களின் திறன் பயிற்சி வழங்குவதற்கு 28 லட்சம் மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற திட்டத்தில் பயிற்சித் திறன் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர்கள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதற்காக தினம் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் குழந்தைகள் காலையில் சரியான உணவு எடுத்துக் கொள்ளாததால் மாணவர்கள் சோர்வடைந்து உள்ளனர். அதனால் அவர்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும் என்பதற்காக காலை சிற்றுண்டி என்ற திட்டத்தை தொடங்கி அதன் மூலம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது என பேசினார்.
தொடர்ந்து மங்களம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 170 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டியை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத் தலைவர் உஷாராணி, மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu