துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு கூட்டத்தில் துணை சபாநாயகர் பங்கேற்பு

துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு கூட்டத்தில் துணை சபாநாயகர் பங்கேற்பு
X

கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் ஒன்றிய பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் பங்கேற்றார்.

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, க ல ந்து கொண் டு சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட் சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு துணைதலைவர் உஷாராணி சதாசிவம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது: நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கி வருகிறார். அதேபோல் முதலமைச்சர் வளர்ச்சி திட்ட பணி அனைத்தும் துரிதமாக வழங்கிக் கொண்டே வருகிறார். எண்ணற்ற வளர்ச்சி பணிகளும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார்.

அதில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமியிடமும், நான் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 4 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைத்து அதை திறந்து வைக்கப்பட்டு அதன் மூலம் வளர்ச்சி பணிகள் அனைத்தும் துரிதமாக செய்ய வேண்டும் மக்களுக்கு சிறந்த முறையில் தமிழக அரசின் திட்டங்களும் சலுகைகளும் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும்.

அதன்படி துரிஞ்சாபுரம் ஊராட்சியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் துரிதமாக செய்து தமிழக அரசு வழங்கும் திட்டங்களை மக்களுக்கு சென்றடைந்து வருகிறது . மேலும் ம க்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சரியாக பரிசீலனை செய்து அவர்கள்கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடகிழக்கு பருவமழைபெய்து கொண்டிருப்பதால் மக்கள் யாரும் ஏறி பகுதியிலும் ஆறு பகுதியிலும் குளம் குட்டை பகுதியிலும் செல்லாமல் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் அதுவும் குறிப்பாக மேடு பகுதியில் வசிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமும், ஒன்றிய செயலாளர் ராமஜெயம், இன்ஜினியர்கள் அருணா, தமிழரசி, பிரசன்னா, மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா