இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பங்கேற்பு

இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில்  துணை சபாநாயகர் பங்கேற்பு
X

இல்லந் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, உடன் அண்ணாதுரை எம்பி.

இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பங்கேற்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சோமாசி பாடி ஒன்றியத்தில் இல்லன் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி வீடு வீடாக வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சோமாசி பாடியில் அரசின் திராவிட மாடல் ஆட்சியில் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார் .

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கியும் திண்ணைப் பிரச்சாரம் செய்தும் பேசினார் . அப்போது அவர் பேசுகையில்,

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் இரண்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் மகளிர்க்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருவதும் , அரசு பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பட்டப்படிப்புக்கு பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது என கூறினார்.

மேலும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்கும்போது ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சராக அறிவித்துள்ளார் . காலை சிற்றுண்டி திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலாவதாக துவக்கப்பட்டுள்ளது.

இந்த சோமாசி பாடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன், நமது கீழ் பெண்ணாத்தூர் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை நமது முதல்வர் வழங்கியுள்ளார் என பட்டியலிட்டு துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அரசின் சாதனைகளை விளக்கியும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் உங்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் திமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், கிளை செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன், சோமாசி பாடி பகுதி செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!