டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவு

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவு
X

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேவையான பல்வேறு மருத்துவ பொருட்களை வழங்கிய பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை ஊராட்சி தலைவர்களுக்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் , மழைக்கால தொற்றுநோய்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 45 ஊராட்சித் தலைவர்கள் , ஊராட்சி செயலாளர்களுக்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி உத்தரவிட்டார்.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆறுமுகம் , ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலந்துகொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேவையான பல்வேறு மருத்துவ பொருட்களை வழங்கினார். மேலும் கழிவுநீர்க் கால்வாய்களை தூர் வாரி சுத்தப்படுத்த வேண்டும், சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்கள் , ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story