கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் தொழில்பேட்டை அமைக்க துணை சபாநாயகர் கோரிக்கை

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் தொழில்பேட்டை அமைக்க துணை சபாநாயகர் கோரிக்கை
X

சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தார்.

Tiruvannamalai News Today -கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் சட்டப்பேரவை துணைத் தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.

Tiruvannamalai News Today -திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான பிச்சாண்டி கோரிக்கை விடுத்தாா்.

மாவட்ட ஆட்சியா் முருகேஷை, சந்தித்து மனு அளித்தாா். அந்த மனுவில், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் தென்பென்ணையாற்றை செய்யாற்றுடன் இணைத்து, இதை நந்தன் கால்வாய்த் திட்டத்தில் இணைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தொகுதியில் புதிதாக அரசு கலைக் கல்லூரியை தொடங்க வேண்டும். அனைத்துக் கிராமங்களுக்கும் காவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும். கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கடம்பை ஊராட்சியில் உள்ள 50 ஏக்கா் அரசு நிலத்தில் சிட்கோ, சிப்காட் தொழில்பேட்டைகளை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
future ai robot technology