புதிய தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த துணை சபாநாயகர்!

புதிய தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த துணை சபாநாயகர்!
X

பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்

புதிய தார் சாலை அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாதுளம்பாடி முதல் மங்கலம் ஈபி சாலை வரை 1 தார்சலையும், வேடந்தவாடி முதல் பூதமங்கலம் வரை 1 தார் சாலையும் ரூ 3கோடியே 82 லட்சத்தில் புதிய 2 தார் சாலைகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சீதா மோகன், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசியதாவது ;

நான் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது, மாதுளம்பாடி மக்களும் வேடந்தவாடி மக்களின் எங்கள் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது . அதனால் எங்கள் பகுதியில் புதிய தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு நிதியில் மாதுளம்பாடி முதல் மங்கலம் ஈபி சாலை வரை 1 தார்சாலை ரூ 2 கோடியே 8 லட்சத்தில் புதிய தார் சாலையும், அதேபோல் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் வேடந்தவாடி முதல் பூதமங்கலம் வரை 1 தார் சாலை ரூ 1கோடியே 73 லட்சத்தில் புதிய தார் சாலையில் இரண்டு இடங்களில் 2 புதிய சாலைகளை சுமார் ரூ 3 கோடியே 82 லட்சத்தில் புதிய சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

அதன் பிறகு மக்கள் நீங்கள் சுலபமான முறையில் பாதுகாப்பாக இந்த புதிய தார்சாலையில் செல்லலாம் இது போன்ற எண்ணற்ற திட்டத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக வழங்கி வருகிறார். அதன் மூலம் தமிழக மக்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பேசினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் ,கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil