கீழ்பெண்ணாத்தூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
X

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.

கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை, கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோமாசிபாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி, கனபாபுரம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், குடிநீர் திட்டப்பணி, வழுதலங்குணம் கிராமத்தில் பணிகள் முடியும் தருவாயில் உள்ள சுகாதார வளாகம் ஆகியவற்றை, மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் பார்வைவயிட்டு ஆய்வு செய்தார். அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மேக்களூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலப்பள்ளியில், பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிைய கூடுதல் கலெக்டர் பிரதாப் பார்வைவயிட்டார். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. பஞ்சாயத்துக்களில் நடந்து வரும் அனைத்துப் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, ஒன்றிய ஆணையாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் பர மேஸ்வரன், ஒன்றிய பொறியாளர்கள் வினோத்கண்ணா, பிரசன்னா, பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!