வேட்டவலத்தில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு

வேட்டவலத்தில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு
X
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்‌, வேட்டவலத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி கிளையில்‌ பணிபுரியும் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடத்தியதில், 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தூய்மை பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து வங்கிக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ai marketing future