பொது சுகாதார மையம் கட்டும் பணி துவக்கம்
பூமி பூஜையில் பங்கேற்ற துணை சபாநாயகர்
கீழ்பெண்ணாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலைய வளாகத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பொது சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் அன்பு, மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், பேரூராட்சி முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு
கீழ்பெண்ணாத்தூரில் பெண்கள் இலவச தையில் பயிற்சி மையத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்
ரோட்டில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் அறக்கட்டளை சார்பில் பெண்கள் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ சங்கர் சுவாமிகள் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு பெண்கள் இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி மகளிர் தையல் பயிற்சியில் சேர்வதற்கான படிவங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் சிறப்பான முறையில் தையல் பயிற்சியினை முடித்து சொந்த காலில் நின்று வாழ்க்கையில் சாதித்து காட்ட வேண்டும் என வாழ்த்துரை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துறை தலைவர் தமிழரசி, கோவில் அறக்கட்டளை செயலாளர், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள், செயலாளர், மகளிர் சுய உதவி குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu