திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்
X

பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் துணை சபாநாயகர் பிச்சாண்டி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டுமான பணிகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள நாயுடு மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 14 கோடியில் இலங்கை தமிழர்களுக்கு 252 வீடுகள் கட்டுமான பணிகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம் , ஒன்றிய செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம்மாள் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி இலங்கை தமிழருக்கு 252 வீடுகள் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது இலங்கை தமிழர்கள் எங்கள் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் மூலம் புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தென் கொணடம், பள்ளிப்பட்டு ஆகிய இரண்டு இலங்கை தமிழர் வாழும் மக்களுக்கு நாயுடு மங்கலம் பகுதியில் 252 , வீடுகள் ரூபாய் 14 கோடியில் கட்டப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி சாலை வசதி மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனுக்குடன் அமைத்துக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இலங்கைத் தமிழருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் நலனுக்காக பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தற்போது அவருடைய மகன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காகவும், படிக்கும் மாணவர்களுக்காகவும், தாய்மார்களுக்காகவும் பல திட்டங்களை வழங்கி வருகிறார்கள்ங

இவ்வாறு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, பொறியாளர் அருணா, ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், அணி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி