/* */

தாா்ச்சாலை அமைக்கும் பணி: பேரவை துணை சபாநாயகர் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூா் பேரூராட்சியில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆய்வு செய்தாா்.

HIGHLIGHTS

தாா்ச்சாலை அமைக்கும் பணி: பேரவை துணை சபாநாயகர் ஆய்வு
X

தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை, பாா்வையிட்டு ஆய்வு செய்த  தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி.

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் ரூ. ஒரு கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கீழ்பென்னாத்தூரில் இருந்து பேரூராட்சி எல்லைக்குள்பட்ட ராஜாதோப்பு பகுதி வரை ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ஒரு கோடி ரூபாயில் புதிதாக தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நபாா்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன், நகர திமுக செயலாளா் அன்பு ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னர் துணை சபாநாயகர் பஸ் நிலைய நிழற்குடையை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் அங்கன்வாடி, பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்த துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி சோமாசி பாடியில் பஸ் நிலைய நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சிஆறுமுகம், ராஜேந்திரன், துணை செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர் அன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் ஊராட்சியில் கிராம செயலக புதிய கட்டிடத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார் .

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், நகர திமுக செயலாளர், பேரூராட்சி தலைவர் சரவணன் ,உதவி பொறியாளர் சிவபாத சேகர், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 16 Dec 2023 2:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது