அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
X

அக்னிபத்' திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் அக்னிபத்' திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், 'அக்னிபத்' திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணைத்தலைவர் அண்ணாச்சி, மாவட்ட பொருளாளர் சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொது செயலாளர் டி.கதிர்காமன் நன்றி கூறினார்.

வந்தவாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொது செயலர் எம்.வசந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் கராத்தே ராஜா, துரிஞ்சாபுரம் கோபாலகிருஷ்ணன் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

சேத்துப்பட்டில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் போளூர் நகர காங்கிரஸ் தலைவர் சிவாஜி ,தேவிகாபுரம் காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள் மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story