தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற முதல்வர் நடவடிக்கை: துணை சபாநாயகர்

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற முதல்வர் நடவடிக்கை:  துணை சபாநாயகர்
X

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி துணை சபாநாயகர் பிச்சாண்டி வைத்தார்

தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 998 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறும்போது , தமிழகத்தில் ஏற்கனவே குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சியில் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிசை வீட்டில் இருப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டது. இதையடுத்து ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கைவிடப்பட்ட இத்திட்டம் தொடர தற்போது தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவர்கள், பிடிஓ விஜயலட்சுமி ,கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்