திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சார பொதுக்கூட்டம்
முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ள இடத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணியினை ஆய்வு செய்த அமைச்சர் வேலு
திருவண்ணாமலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை, தரணி வேந்தன் ஆகியோரை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
திருவண்ணாமலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர்கள் அண்ணாதுரை, தரணி வேந்தன் ஆகியோரை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாளை திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.
பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார், நாளை புதன்கிழமை மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சோமாசி பாடி அருகில் உள்ள சோ. காட்டுக்குளத்தில் திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் கழக வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது.
பொதுக் கூட்டத்துக்கு அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகிக்கிறாா். அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருப்பத்தூா் மாவட்டச் செயலா் தேவராஜ், எம்எல்ஏக்கள் சரவணன், அம்பேத்குமாா், ஜோதி, நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். செங்கம் எம்எல்ஏ கிரி வரவேற்கிறாா்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவண்ணாமலை வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை, ஆரணி வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறாா்
பொதுக் கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் செங்கம் குமார் மதிமுக மாவட்ட செயலாளர், சீனி கார்த்திகேயன், திராவிடர் கழக தலைவர் மூர்த்தி ,மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தங்கராஜ், இந்தியா முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் சுலைமான் ,விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நியூட்டன், மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் அருள், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நாசர், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அமீர்கான், விவசாய தொழிலாளர்கள் கட்சி மாவட்ட தலைவர் வாசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் வினோத், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதிவளவன், யாதவ மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், தலித் விடுதலை இயக்கம் செயலாளர் கிச்சா மற்றும் தோழமை இயக்கங்களின் நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கிளை மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், அனைத்து நகர செயலாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். மேலும் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் நன்றி உரையாற்றுவார்..
அமைச்சர் பார்வை
பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு , திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் அவர்கள் வாக்கு சேகரிக்க கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சோமாசி பாடி அருகில் உள்ள சோ. காட்டுக்குளத்தில் உள்ள இடத்தினை பார்வையிட்டு, இறுதி கட்ட பணியினை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். உடன் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu