கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு  சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
X

மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய சி.ஐ.டி.யு.வினர்.

கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.ஐ.டி.யு. கோட்ட தலைவர் ஜெ.அருள்தாஸ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ஆர்.சிவராஜ் கலந்துகொண்டு பேசினார். கோட்ட செயலாளர் அ.செந்தில்குமார், துணை செயலாளர் ப.பாவேந்தன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 2019-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கே.நாராயணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!