முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தொடக்கம்
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேளானந்தல் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடக்கி வைத்தார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேளானந்தல் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடக்கி வைத்தார்.
வேட்டவலம் அருகே வேளானந்தல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, தாசில்தார் சாப்ஜான், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் மகாலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தொடக்கி வைத்து, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தைக்கு அமைச்சர் உணவுகளை ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்..
செங்கம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் பேரூராட்சி பகுதி என மொத்தம் 110 பள்ளிகளில் இரண்டாம் கட்ட முதலமைச்சர் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பெருமளவில் பயன் பெறுவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி தடை இன்றி படிப்பதற்கு இத்திட்டம் வழி வகுப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ,நகர செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்யாறு
செய்யாறு சட்டமன்ற தொகுதியில் வெம்பாக்கம் மற்றும் எறையூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது. செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா தலைமை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் ஜெயகாந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் ராஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டியை மாணவர்களுக்கு ஊட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் மோகனவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிதரன், ஜெய்சங்கர், வட்டார கல்வி அலுவலர் புருஷோத்தமன், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu