வேட்டவலத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: துணை சபாநாயகர் பங்கேற்பு
பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சியில், மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.
முகாமுக்கு, பேரூராட்சித் தலைவா் கெளரி நடராஜன் தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் தலைவா் முருகையன், வாா்டு உறுப்பினா் தமிழரசி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி செயலா் சுகந்தி வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.
இதையடுத்து, பேரூராட்சியின் 1 முதல் 8 வாா்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனா்.
கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சரளா, துணை வட்டாட்சியா்கள் சீதாராமன், மாலதி, வருவாய் ஆய்வாளா் அரிகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.
முதல் கட்டமாக ஒன்று முதல் எட்டு வார்டுகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்ட வருவாய் துறை, மின்சார துறை, பேரூராட்சி, காவல்துறை, வேலைவாய்ப்பு துறை, மாற்றுத்திறனாளி நலன் உள்ளிட்ட 13 துறை சார்ந்த அதிகாரிகளிடம் 385 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
பின்னர் மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் கணினியில் பதிவேற்றி ஒப்புகை சீட்டு வழங்கினர்.
முகாமில் மின்சார துறை சார்ந்த பெயர் மாற்றம் குறித்த கோரிக்கை உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி சான்றிதழை வழங்கினார்.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஒன்பது முதல் 15 வார்டுகளுக்கு முகாமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா, துணை வட்டாட்சியர்கள் சீதாராமன், மாலதி, செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவி செயற்பொறியாளர் தினகரன், காவல்துறை அதிகாரிகள் அகிலன், ஆர் ஐ அரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், மற்றும் அரசு அதிகாரிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu