மோடி மீண்டும் பிரதமராக வேண்டி கிரிவலம் வந்த பாஜகவினர்
மடாதிபதி சுவாமி பிரம்ம யோகானந்தா உடன் வேட்பாளர் அஸ்வத்தாமன்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார்.
இவரது வெற்றிக்காகவும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும் சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் பாரத மாதாவுக்கு கோயில் கட்டி வழிபட்டு வருபவா் மடாதிபதி சுவாமி பிரம்ம யோகானந்தா.
இவா், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். சம்பந்த விநாயகா் சந்நிதி, அருணாசலேஸ்வரா் சந்நிதி, உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்ட அவருக்கு கோயில் நிா்வாகம், சிவாச்சாரியார்கள் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
கிரிவலம் வந்த மடாதிபதி..
இதையடுத்து, சுவாமி பிரம்ம யோகானந்தா திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ.தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டாா். இவருடன், வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன், தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பாலசுப்பிரமணியன், பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநில துணைத் தலைவா் சங்கா், பாமக மாநில நிா்வாகி காளிதாஸ், பாஜக நிா்வாகி அறவாழி மற்றும் பாஜகவினா் கிரிவலம் சென்றனா்.
கீழ்பெண்ணாத்தூர்
தொடர்ந்து திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்போது திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாக ரயில் சேவை ஏற்படுத்துவதே எனது முதல் பணி என பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் தெரிவித்தார்.
மேலும் கரும்பு மற்றும் நெல் விவசாயிகள் பயனடையும் வகையில் பயோ எத்தனால் தொழிற்சாலை அமைக்கப்படும். அதன் மூலம் விவசாயிகளின் வருவாய் நேரடியாக உயரும் இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்.
தென்பெண்ணை ஆறு பாலாறு இணைப்பு திட்டம் விரைவுப்படுத்திய உடனடியாக விவசாயிகள் பயன்படும் வகையில் அமைத்து தரப்படும் என அஸ்வத்தாமன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,பாஜக கோட்ட பொறுப்பாளர் குணசேகரன், பாமக, தமாக, புதிய நீதி கட்சி, அமுமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து படவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் பகுதியில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமனை ஆதரித்து பிரசாரம் நடைபெற்றது.
ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக மத்திய அரசு நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் தலைமையில் வீதி, வீதியாகச் சென்று மத்திய அரசின் சாதனைகள் குறித்து விளக்கிக் கூறி தாமரை சின்னத்துக்கு பாஜக நிா்வாகிகள் வாக்கு சேகரித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu