கீழ்பென்னாத்தூர் போளூர் பகுதிகளில் பாஜக செயற்குழு கூட்டம்

கீழ்பென்னாத்தூர் போளூர் பகுதிகளில் பாஜக செயற்குழு கூட்டம்
X

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் , போளூர் வட்டத்தில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய பாஜகவின் செயற்குழுக் கூட்டம் கீழ்பென்னாத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வடக்கு ஒன்றியத் தலைவா் பாவேந்தன் தலைமை வகித்தாா்.

தெற்கு மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம், கல்வியாளா் பிரிவின் மாவட்டத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய பொதுச் செயலா் வினோத்குமாா் வரவேற்றாா்.

கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில்,

கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியத்தின் அனைத்து கிராமங்களிலும் வாக்குச்சாவடி குழு அமைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஒன்றிய பொதுச் செயலா் முருகேசன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் பிச்சாண்டி, சிறுபான்மை பிரிவின் ஒன்றியத் தலைவா் இப்ராஹீம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பாஜக நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகரத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவா் ஏழுமலை கலந்துகொண்டு, கிராமங்கள்தோறும் பாஜக கொடி ஏற்றுவது, கட்சி உறுப்பினா்கள் சோக்கை, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பது உள்ளிட்டவை குறித்து பேசினாா்.

இதில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!