கீழ்பென்னாத்தூர் 6-வது வார்டில் பாமக, பாஜகவுக்கு தலா 'ஒரு' வாக்கு

கீழ்பென்னாத்தூர் 6-வது வார்டில் பாமக, பாஜகவுக்கு தலா ஒரு வாக்கு
X
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 6-வது வார்டில் பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தலா ‘ஒரு‘ வாக்கு மட்டுமே பதிவானது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், 6-வது வார்டில் அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் 2 சுயேட்சைகள் என 7 பேர் போட்டியிட்டனர். அவர்களில், அதிமுக வேட்பாளர் ராஜகோபால், 196 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களான ஆறுமுகம் 160 வாக்குகளும், சுப்ரமணி 133 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மணி 102 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதேநேரத்தில், இவர்களுடன் போட்டியிட்ட பாமக மற்றும் பாஜக வேட்பாளர்கள் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளனர். பாமக வேட்பாளர் கணேசன் மற்றும் பாஜக வேட்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலா ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளனர். வேட்பாளர்களை தவிர, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரம் என யாரும், அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

மேலும், அவர்கள் சார்ந்துள்ள கட்சியினரும் அவர்களை புறக்கணித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோவிந்தன் 3 வாக்குகளை பெற்றுள்ளார். 6-வது வார்டில் போட்டியிட்ட 7 வார்டுகளில் பாஜக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் டெபாசிட் இழந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!