திருவண்ணாமலை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த துணை சபாநாயகர் பிச்சாண்டி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் இனிப்புகள் ஆகியவற்றினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகர தலைவர் வெற்றிச்செல்வன், துணைத்தலைவர் அண்ணாச்சி, காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் ,தொண்டர்கள் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் திருவண்ணாமலையில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் . இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளர் கார்த்தி வேல்மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் , நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணி நிர்வாகிகள், திமுக தொண்டர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போளூர்

கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் காமராஜர் மற்றும் காந்தி அவர்கள் உருவ சிலைக்கு திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட பொருளாளர், சத்தியன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். உடன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட துணைத் தலைவர் பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் மோகன் குமார் தலைமையில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொது குழு உறுப்பினர் நாகராஜ் நகரத் தலைவர் செல்வம் நகர பொருளாளர் இளையராஜா விவசாய பிரிவு தலைவர் நாராயணன் இளைஞர் காங்கிரஸ் பிரிவு நிர்வாகிகள் காங்கிரஸ் நகர நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றி கழகம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய நகர வெற்றி கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா