கலசபாக்கம் அருகே புதிய பயணியர் நிழற்குடை அமைக்க பூமி பூஜை

கலசபாக்கம் அருகே புதிய பயணியர் நிழற்குடை அமைக்க பூமி பூஜை
X

பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி

புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜையை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள எரும்புண்டி ஊராட்சியில் ரூ 10 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள எரும்புண்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது, இப்பகுதி ஊராட்சி மக்கள் எங்கள் பகுதியில் உள்ள கூட்டு சாலையில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பேருந்து சரியான முறையில் நிறுத்துவதில்லை .அதனால் இந்த இடத்தில் பேருந்து நின்று செல்லவும், மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது மழை வெயிலில் சிரமின்றி உட்காருவதற்கும் புதிய பயணியர் நிழற்குடை அமைத்துத் தாருங்கள் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அந்த கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சமும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 5 லட்சமும் சுமார் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு இப்போது பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட கவுன்சிலர் சகாதேவன் ,இளைஞர் அணி அமைப்பாளர்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் ,வருவாய்த்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture