காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு காவல்துறையினர் விளக்கினர்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் காவல் நிலையத்தின் சார்பில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மங்கலத்தில் நடைபெற்றது.
சப்-இன்ஸ்பெக்டர் நசுரூதீன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் காவல் உதவி செயலி மூலம் போலீஸ் நிலைய இருப்பிடங்கள், வணிகர் உதவி, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் விவரங்கள், இணைய குற்ற நிதி மோசடி புகார், பிற அவசர உதவி எண்கள், போலீஸ் சரிபார்ப்பு சேவைகள், போக்குவரத்து அபராத கட்டணம், இழந்த ஆவண அறிக்கை, சமூக ஊடகங்கள், முதல் தகவல் அறிக்கையின் நிலை, எச்சரிக்கைகள், அனைத்து இ-சேவைகள் போன்ற சேவைகள் பெறலாம் என்று பொதுமக்களுக்கு விளக்கினார்.
மேலும் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்ய க்யூஆர் கோர்டை பயன்படுத்தலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது மங்கலம் போலீஸ் நிலைய போலீசார் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu