பள்ளி மாணவா்களுக்கு பாதுகாப்பான தீபாவளி கொண்டாட விழிப்புணா்வு

பள்ளி மாணவா்களுக்கு  பாதுகாப்பான தீபாவளி கொண்டாட விழிப்புணா்வு
X

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி.

அரசுப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு அரசுப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஆஷா எல்லப்பன் தலைமை வகித்தாா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மதினா காளிமுத்து முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் தேன்மொழி, அறிவியல் பட்டதாரி ஆசிரியை மீனா ஆகியோா் ஏற்பாட்டில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்தி பிரதான சாலை, மற்றும் முக்கிய தெருக்களில் ஊா்வலமாகச் சென்று கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஆரணி

ஆரணியை அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது குறித்து மாணவா்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது .

ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், தீ எவ்வாறு ஏற்படுகிறது, அத்தீயை அணைப்பது குறித்து மாணவா்களுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

இதில் பள்ளித் தாளாளா் இப்ராஹிம், இயக்குநா் ரியாஸ்அகமது, ஷாசியா பா்வீன், பள்ளி முதல்வா் நிா்மல்குமாா், துணை முதல்வா் நிஷா, தலைமை ஆசிரியா் நதியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தாடைகள்

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆராஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கனவு இந்தியா அமைப்பு சாா்பில், பள்ளியில் 210 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள புத்தாடைகள், இனிப்பு, பட்டாசு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை அமுதா தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியை திலகம் முன்னிலை வகித்தாா். பட்டதாரி ஆசிரியை லூா்துமேரி வரவேற்றாா்.

இதில், வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீராமுலு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் வாசுகி ஆறுமுகம், ஊராட்சி மன்றத் தலைவா் விஜயாசேகா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள், இனிப்பு, பட்டாசு ஆகியவற்றை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் கனவு இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிா்வாகிகளான வழக்குரைஞா்கள் சதீஷ், கபிலன், சீனிவாசன், பூபாலன், தேவா மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி ஆசிரியை லாவண்யா நன்றி கூறினாா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!