ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
X
திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2021-22 ஆம் ஆண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்கு மிகாமலும் மற்ற பிரிவினருக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மேலும் தொடக்கக் கல்வி பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு 16.8.21 முதல் 27.8.2021 வரை https://scetr.tnschools.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவும் அல்லது கீழ்பெண்ணாத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்