ஆரணி, கீழ்பெண்ணாத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆரணி, கீழ்பெண்ணாத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
X

ஆரணியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ஜெயசுதா.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணி மற்றும் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மேக்களூர் , கழி குளம், கிராமங்களில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தொப்பலான் தலைமை வகித்தார். கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன் , தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக முன்னாள் அமைச்சரும் , கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர், ராமச்சந்திரன் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாஷ்யம் , கோவிந்தராஜ் , சரவணன், வேட்டவலம் நகர செயலாளர் செல்வமணி, ஒன்றிய துணை செயலாளர்கள், ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் சைதாப்பேட்டை, மருசூா், சித்தேரி, சங்கீதவாடி, கொருகாத்தூா், கீழ்நகா், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் மகளிா் அணி, இளைஞா்-இளம் பெண்கள் பாசறை, மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆரணி எம்எல்ஏ சேவூா் .ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளா் ஜெயசுதாலட்சுமி காந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளா் கோவிந்தராசன், நகரச் செயலாளா் அசோக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பாபு, ஒன்றிய செயலாளா்கள் சங்கா், கஜேந்திரன், திருமால், ஜெயப்பிரகாஷ், அரங்கநாதன், பேரூராட்சி செயலாளா் பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளா் அரையாளம் வேலு, முன்னாள் நகர கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆனந்த், மருசூா் ஊராட்சித் தலைவா் .சதீஷ்குமாா், சங்கீதவாடி ஊராட்சித் தலைவா் கற்பகம் சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்ப நிா்வாகி விமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!