வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி: ஊழியர்கள் கைது
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பள்ளிகொண்டாபட்டு கிராமத்தை சேர்ந்த முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர், தச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாக குழு தலைவர் சங்கரமூர்த்தி, பெரிய கல்லபாடி கிராமத்தை சேர்ந்த சங்க எழுத்தார் பிரதீஷ்குமார், பள்ளிகொண்டாபட்டு கிராமத்தை சேர்ந்த முன்னாள் உதவி செயலாளர் அருணகிரி ஆகியோர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்தபோது கடந்த ஏப்ரல் 2018 முதல் 2021 மார்ச் வரையிலான காலகட்டத்தில் சங்க உறுப்பினர்களின் சிறுசேமிப்பு கணக்கு, விவசாய கடன் கணக்கு, எல்லார் எஸ் கடன் கணக்கு மற்றும் பணியாளர்களின் சம்பள கணக்கு ஆகியவற்றில் பொய்யான ஆவணங்களை தயார் செய்து போலி கணக்குகளை எழுதியும் உறுப்பினர்களைப் போல் போலி கையோப்பமிட்டு சங்க பணம் ரூபாய் 8 லட்சத்து 30, ஆயிரம் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டு கையாடல் செய்துள்ளனராம்.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கர், சுந்தரமூர்த்தி, பிரதீஷ்குமார் , அருணகிரி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu