திருவண்ணாமலையில் வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்:சட்டப்பேரவை துணைத்தலைவர் பங்கேற்பு

திருவண்ணாமலையில் வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்:சட்டப்பேரவை துணைத்தலைவர் பங்கேற்பு
X

திருவண்ணாமலையில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி.

திருவண்ணாமலையில், 122 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 122 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட 2-ஆவது சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இம்முகாமுக்கு வேளாண்மைத்துறை துணை இயக்குநா்கள் வடமலை (நுண்ணீா் பாசனம்), சி.ஹரிக்குமாா் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத்தலைவா் பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய 40 மனுக்களை பெற்றுக்கொண்டாா். மேலும், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களையும் வழங்கி பேசினாா்.

இதையடுத்து, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பேரவை துணைத் தலைவா் பிச்சாண்டி அதிரடியாக உத்தரவிட்டாா். முகாமில், வேளாண்மைத்துறை உதவி இயக்குநா் செல்வராஜ், தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் பிரகாஷ் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story