அரசு பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு பரிசு

அரசு பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு பரிசு
X

ஜமீன் அகரம் பள்ளியில் விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் முருகன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

Awards For Students - வேட்டவலம் அருகே ஜமீன் அகரம் நடுநிலைப்பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Awards For Students - திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஜமீன்அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 40 மாணவர்களும், 44 மாணவிகளும் என மொத்தம் 84 பேர் படித்து வருகின்றனர்.

அதில் பள்ளி மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் அந்த மாதத்தில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத மாணவர்களுக்குப் பரிசு வழங்குவது எனப் பள்ளி சார்பாக முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காத 34 மாணவர்களுக்கு பள்ளியில் நடந்த இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் முருகன் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவை அடங்கிய எழுதுப்பொருட்கள் தொகுப்பை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, கவுரி, சுடர்விழி, அருண்குமார், மார்கிரேட்மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!