கீழ்பென்னாத்தூரில் 7வது மெகா தடுப்பூசி முகாம்: பேரவை துணை சபாநாயகர் ஆய்வு

கீழ்பென்னாத்தூரில் 7வது மெகா தடுப்பூசி முகாம்: பேரவை துணை சபாநாயகர் ஆய்வு
X

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

கீழ்பென்னாத்தூர் பகுதியில் தடுப்பூசி முகாமை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற 7வது மாபெரும் தடுப்பூசி முகாமினையொட்டி கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட சோமாசிப்பாடி மற்றும் கடம்பை ஊராட்சிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

பின்னர் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஐங்குணம் மற்றும் கானலாப்பாடி ஊராட்சிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு, அங்கு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

ஆய்வின் போது வருவாய் கோட்ட அலுவலர், கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய குழு தலைவர், வட்டார மருத்துவ அலுவலர் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!