கள்ளச்சாராயம், வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 37) என்பவர் அவரது வீட்டின் பின்புறத்திலும் மற்றும் வழுதாலங்குலம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (37) என்பவர் சமத்துவபுரம் கிராமத்திலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் வெம்பாக்கம் தாலுகா நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜான்பாஷா (26) மற்றும் அவரது சகோதரர் முன்னாகான் (28) ஆகிய இருவரும் வந்தவாசி மும்முனி பைபாஸ் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக வந்தவாசி தாலுகா போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரும் தொடர்ந்து சட்ட விரோதச்செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஏழுமலை, பிரபாகரன், ஜான்பாஷா, முன்னாகான் ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu