கீழ் பெண்ணாத்தூர் பா.ம.க வேட்பாளரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பிரசாரம்
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு பிறகு இன்று தான் உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக காரிலிருந்து பேசக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் வேறுவழியின்றி வெளியில் வராமல் காரிலிருந்து பேசுகிறேன்.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் பாமகவில் போட்டியிடும் செல்வகுமார் மிகச் சிறந்த உழைப்பாளி, செல்வக்குமாரின் வெற்றி உறுதி அவருடைய வெற்றிக்காக பாடுபடடு கொண்டு இருக்ககூடிய பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி.
செல்வகுமாரின் வெற்றிக்கு பாடுபட கூடியவர்கள் இன்னும் கடுமையாக உழைத்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றவுடன் ஒரு கூடை மாம்பழம் இரண்டு கூடை மாம்பழம் கொண்டு வந்து தர வேண்டும் என்று கூறினேன். ஆனால், இந்த தொகுதியில் செல்வகுமார் வெற்றி பெற்றவுடன் மூன்று கூடை மாம்பழம் கொண்டு வந்து தர வேண்டும் செல்வகுமார் மிகச் சிறந்த பேச்சாளர். அவருக்கு இளைஞர்கள் வீடு வீடாக சென்று மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும். திண்ணை பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.
இந்த தொகுதியில் அதிக அளவில் பெண்கள் தன்னை வரவேற்றார்கள் அவர்களும் வீடு வீடாக சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி பொது மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu