கீழ்பெண்ணாத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கீழ்பெண்ணாத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த சட்டப்பேரவை துணை சபாநாயகர்  பிச்சாண்டி.

சோமாசிபாடி கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

கீழ்பெண்ணாத்தூர்அடுத்த சோமாசிபாடி கிராமத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் சர்க்கரை தலைமை வகித்தார் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.

மேலும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வெளுங்கனந்தல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆறுமுகம், வட்ட வழங்கல் அதிகாரிகள், வருவாய் துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!