தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!

தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!
X

தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மட்டவெட்டு கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் மட்டவெட்டு கிராம மக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இரண்டாம் அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்து மட்டவெட்டு கிராமத்தில்பொதுமக்கள் அனைவரும் தொற்று பரிசோதனை மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வந்தனர்.

கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் உதவி மருத்துவர் தேன்மொழி தலைமையில் பொதுமக்களுக்கு தொற்று பரிசோதனை மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணலதாராமு முதலாவதாக தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார். அதன்பின் அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!