கலசபாக்கம்: ஹாலோ பிரிக்ஸ் கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கலசபாக்கம்: ஹாலோ பிரிக்ஸ் கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X
கலசபாக்கம் அருகே ‘ஹாலோ பிரிக்ஸ்’ கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் ஹாலோ பிரிக்ஸ் கல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் நடத்தி வருகிறார். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவநாராயணன்மாஹி (வயது 50), சுரேஷா (30), தசரத் (20), அகிலேஷ் (23), ஆகிய 4 பேர் தொழிலாளிகளாக பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் ஹாலோ பிரிக்ஸ் கற்களை டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹாலோ பிரிக்ஸ் கற்கள் டிராக்டரில் இருந்து சரிந்து கீழே விழுந்தது. இதில் தேவநாராயணன்மாஹி, சுரேஷா, தசரத் ஆகிய 3 பேர் சிக்கி படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தேவநாராயணன்மாஹி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story