/* */

வாக்களிக்க வரும் தாய்மார்களை கனிவுடன் நடத்த கலெக்டர் அறிவுரை..!

வாக்களிக்க வரும் தாய்மார்களை கனிவுடன் நடத்த வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்

HIGHLIGHTS

வாக்களிக்க வரும் தாய்மார்களை கனிவுடன் நடத்த கலெக்டர் அறிவுரை..!
X

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்

வாக்களிக்க வரும் தாய்மார்களே கனிவுடன் நடத்த வேண்டும், அரசியல் கட்சி முகவர்களுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்று கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளி பட்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் அறிவுரை கூறினார் .

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு நடைபெறும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அங்கு சென்று தேர்தல் அலுவலர்களுக்கான கூட்டத்தை ஆய்வு செய்தார்.

பயிற்சி முகாமில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில் :

வாக்குப்பதிவின்போது வாக்கு சாவடிகளுக்கு வரும் முதியவர்கள், தாய்மார்கள் ,மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும். அதேபோல் அரசியல் கட்சி முகவரிகளுக்கு உரிய மரியாதை தர வேண்டும் . ஓட்டு இயந்திரங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் தங்களது அஞ்சல் வாக்கு செலுத்தும் முறைகள் குறித்தும், வாக்கு சாவடி தலைமை அலுவலரின் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது . மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை குறித்தும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மாதிரி வாக்குப்பதிவு முறை குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்படும்பொழுது மேற்கொள்ளப்படும் விபரங்கள் குறித்தும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள், ஆவணங்கள் குறித்தும், வாக்குப்பதிவு முகவர்களுக்கான குறிப்புகள் தொடர்பாகவும் விளக்கி எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் அங்குள்ள மாதிரி வாக்கு சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை ருசித்து பார்த்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் ராஜ ராஜேஸ்வரி, தாசில்தார்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 26 March 2024 3:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  3. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  4. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  5. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  8. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  9. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  10. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!