கொரோனா தடுப்பூசி முகாமில் 200 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

கொரோனா தடுப்பூசி முகாமில் 200 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
X
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் 200 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி வட்டார மருத்துவ மனைக்கு உட்பட்ட கீழ்பாலூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம், மாவட்ட துணை இயக்குனர் மரு.அஜிதா அவர்களின் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.கௌதம்ராம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிராம பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

45 வயதுக்கு மேற்பட்ட 200 நபர்கள் பேர் கொரோனா தொற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, ஆர்வமுடன் தாமாக முன்வந்து தங்களுடைய ஆதார் அட்டையுடன் பங்கேற்று, எவ்வித அச்சமின்றி தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள்.

Tags

Next Story
why is ai important to the future