பாலாறு வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்கள் போராடி மீட்பு

பாலாறு வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்கள் போராடி மீட்பு
X
செய்யாறு அருகே பாலாற்றில், வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்கள், 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் மாமண்டூர் கிராம காலனியை சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஏழு பேரும் ஆற்றில் உள்ள மேடான பகுதிக்கு சென்று நின்று கொண்டனர். இருப்பினும் அவர்களால் கரைக்கு திரும்ப முடியவில்லை, பாலாறு வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வந்த பொது மக்கள், வெள்ளத்தில் சிக்கிய 7 பேரையும் பார்த்து, பிரம்மதேசம் போலீசாருக்கும் , தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 பேர் வரவழைக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினருடன் இணைந்து விரைவாக செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 இளைஞர்களையும், சுமார் மூன்று மணி நேரம் போராடி, பாதுகாப்பாக மீட்டனர். செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ் , டிஎஸ்பி செந்தில் , வட்டாட்சியர் சத்யன் ஆகியோர் அப்பகுதியை ஆய்வு செய்து, தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்