ஆரணி அருகே கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

ஆரணி அருகே கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
ஆரணி அருகே கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த முக்குறும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அஜீத்குமார், . இவர், 19 வயதுள்ள இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவியை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றினார். நெருங்கி பழகியதன் விளைவாக கடந்தாண்டு மாணவி கர்ப்பமானார். அப்போது, அஜீத்குமார் கருவை கலைத்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதால், கருவை கலைத்தார். பின், திருமணம் செய்ய மறுத்துள்ளார்.மாணவியின் பெற்றோர், அஜீத்குமாரின் பெற்றோரிடம் முறையிட, அஜீத்குமார், உறவினர்கள் ஏழு பேர் சேர்ந்து அவர்களை தாக்கினர். பின், மாணவியின் பெற்றோர் புகார்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, அஜீத்குமாரை போக்சோவில் கைது செய்தனர். மாணவியின் பெற்றோரை தாக்கி தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.

வியாபாரி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வெம்பாக்கம் வட்டத்துக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது பெற்றோா் அடிக்கடி வெளியூா் சென்று அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வருவதாக தெரிகிறது. இதனால் சிறுமியும், அவரது தங்கை, இரு தம்பிகள் மட்டுமே வீட்டில் தனியாக இருந்து வருவாா்களாம்.

அந்தக் கிராமத்தில் ஐஸ் வியாபாரம் செய்யும் தொழிலாளியான ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த சீனு, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தங்கை, தம்பிகளுக்கு இலவசமாக ஐஸ் கொடுத்து பேசி வந்ததாகத் தெரிகிறது.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சிறுமியை சீனு பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டலும் விடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாராம். சில தினங்களாக சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தாா்.

வெம்பாம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அவரது பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த பெற்றோா், செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். சீனு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.

Tags

Next Story