செய்யாறு அரசு பள்ளியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா

செய்யாறு அரசு பள்ளியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா
X

செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா நடைபெற்றது.

செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா நடைபெற்றது

செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா நடைபெற்றது.

செய்யாறு கல்வி மாவட்டம் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தரணி குமார் தலைமை வகித்தார்.

கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் செல்வத் திருமால், மாவட்ட தொண்டு நிறுவன தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டுனாடின், படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகம், நகரின் சுற்றுப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதைத்தொடர்ந்து செஞ்சிலுவை சங்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு செஞ்சிலுவை சங்க சீருடை இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செய்யாறு ரோட்டரி சங்க தலைவர் திருவாசகம், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story