செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் எம்சிஏ, எம்பிஏ படிப்புகள் தொடங்கப்படுமா?
செய்யாது அரசு கலைக் கல்லூரி, பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் எம்சிஏ மற்றும் எம்பிஏ படிப்புகள் தொடங்கப்படுமா என ஆண்டுதோறும் மாணவ மாணவிகள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ளது செய்யாறு அரசு கலைக்கல்லூரி.
இந்த கலைக் கல்லூரி 1967-ம் ஆண்டு அப்போதைய தமிழக சபாநாயகர் ஆக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணாதுரை இந்த கல்லூரியை திறந்து வைத்தார்.
இதனை அடுத்து அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த முக்கூர் சுப்பிரமணியன் முயற்சியால் இப்போது இந்த கல்லூரியில் பிஎச்டி வரை பாடப்பிரிவுகள் உள்ளன. ஏறத்தாழ 8 ஆயிரம் மாணவ மாணவிகள் இன்று பயின்று வருகின்றனர். செய்யாறு, ஆற்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் கல்லூரியில் பயிலுகின்றனர்.
இந்தக் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிகாம் பாடப்பிரிவுகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கடும் போட்டி இருக்கும். மேலும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவ மாணவிகள் இந்தக் கல்லூரியில் சேர்வதற்கு அதிக போட்டிகள் இருக்கும். இப்பகுதியில் உள்ள தரமான கல்லூரிகளில் செய்யாறு அரசு கலைக்கல்லூரியும் ஒன்றாகும்.
இந்நிலையில் பிஹெச்டி வரை படிப்புகள் உள்ள இந்த கலைக் கல்லூரியில் எம்சிஏ மற்றும் எம்பிஏ போன்ற முதுகலை பட்டப்படிப்புகள் கொண்டுவரப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் இந்த படிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, மூலம் ஆல் இந்தியா கவுன்சில் ஆஃப் டெக்னாலஜி எஜுகேஷன் புதுடெல்லி, வலியுறுத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்த ஆண்டு எம்பிஏ, எம் சி ஏ படிப்புகளை தொடங்க முயற்சி செய்து வருவதாக செய்யாறு எம் எல் ஏ ஜோதி தெரிவித்தார்.
மேலும் இக்கல்லூரியின் முதல்வர் கலைவாணி இது குறித்து தெரிவிக்கையில், இந்த கல்லூரியில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை தொடங்க கூடுதலாக 24 வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் மற்றும் லேப் வசதியை பல்கலைக்கழகம் மூலம் அணுகி உள்ளோம் . மேலும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கல்லூரி கல்வி இயக்குனரிடம் நேரிலும் வலியுறுத்த உள்ளோம். இதன் மூலம் இப்பகுதி கிராம புற மாணவர்களுக்கு கூடுதலாக உயர்கல்வி நிச்சயம் உருவாக்கி தருவோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu