திருவண்ணாமலை அருகே வெம்பாக்கத்தில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை அருகே வெம்பாக்கத்தில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள்
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் அரசுக் கட்டடங்கள் திறந்துவைத்து மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.46.13 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம், கலைஞா் நுழைவு வாயில், நியாய விலைக் கடை ஆகியவை திறந்து வைக்கப்பட்டு மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வெம்பாக்கம் ஒன்றியம், தூசி ஊராட்சி நத்தகொல்லைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழக அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 28 லட்சத்தில் இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் கலைஞா் நூற்றாண்டு விழா நுழைவு வாயில் மற்றும் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டிருந்தன.

அதேபோல, வெள்ளகுளம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9.17 லட்சத்தில் புதிய நியாய விலைக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தன.

இந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா்.

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினா் வேல்முருகன் முன்னிலை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் ராஜி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக , செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஜோதி, தி.மு.க. மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன் ஆகியோா் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்துப் பேசினா்.

நலத் திட்ட உதவிகள்

கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி, வெள்ளாகுளம் கிராமத்தில் தி.மு.க. கொடி ஏற்றி, 300 மகளிருக்கு நலத் திட்ட உதவிகளும், வெம்பாக்கம் ஆதிதிராவிடா் காலனியில் நடைபெற்ற விழாவில், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மகளிா் 300 பேருக்கு நலத் திட்ட உதவிகள், தூசி ஊராட்சி நத்தகொல்லை கிராமத்தில் பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் 300 மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தெய்வமணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, சிட்டிபாபு, அம்பிகாபதி ஜெயந்தி சிவப்பிரகாசம், தயாளன், ஊராட்சிமன்றத் தலைவா்கள் அருள்தேவி செந்தில்குமாா், வெற்றிசெல்வன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் ஜே.சி.கே. சீனிவாசன், சங்கா், தினகரன், ஞானவேல், ரவிக்குமாா், செய்யாறு நகரச் செயலாயர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ai solutions for small business