தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி உள்ளோம்: ஆர் எஸ் பாரதி

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி உள்ளோம்: ஆர் எஸ் பாரதி
X

திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பேசிய ஆர் எஸ் பாரதி

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் இந்தியா கூட்டணியின் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் அரசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பேசியதாவது;

பாஜகவும், அதிமுகவும் தனித்தனியாக போட்டியிடுகிறது. பொதுமக்களின் வங்கிக் கணக்கில் குறைந்தப்பட்ச இருப்புத் தொகை இல்லை எனக்கூறி ரூ.29 ஆயிரம் கோடியை பிரதமா் மோடி பறித்துள்ளாா். இதேநேரத்தில், அவருக்கு வேண்டியவா்களின் வங்கிக் கடன் ரூ.21 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளாா்.

பாஜகவுன் கூட்டணி வைத்திருப்பவா்கள் குடும்பக் கட்சி குறித்து பேசுகின்றனா். பாமக நிறுவனா், அவரது மருமகள் உள்ளிட்டோா் தோ்தலில் போட்டியிடுகின்றனா். இவா்களது கட்சி குடும்பக் கட்சி இல்லையா? தோ்தலுக்கு பிறகு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கவுள்ள அதிமுகவை வாக்குகளால் விரட்டியடிக்க வேண்டும்.

நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பிரதமர் மோடி பத்தாண்டு கால ஆட்சியில் இந்தியாவிற்கு என்ன செய்தார், தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பிரதமரிடம் நமது முதல்வர் 23 கேள்விகளை கேட்டிருக்கிறார், ஆனால் இதுவரை பதில் ஏதும் பிரதமர் கூறவில்லை.

திமுக ஆட்சியில் தொழிர்பேட்டை அமைந்ததன் மூலம் இப்பகுதி வளர்ச்சி பெற்றுள்ளது.

திமுக என்பது பெண்களுக்கு வாக்குரிமை தந்து சமத்துவ உரிமை கொடுத்தது. இது பெரியார் பிறந்த மண் .ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும்போது மக்கள் நல திட்டங்களை செய்து வந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி உள்ளோம். எனவே அனைத்து வாக்காளர்களும் திமுகவுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இன்னும் குறுகிய காலமே இருப்பதால் கட்சியினர் அனைத்து மக்களிடம் சென்று கலைஞர் நம்முடைய முதல்வர் ஆகியோரின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்காக மாற்றி செய்யாறு தொகுதி என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் தரணி வேந்தனை வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ,என ஆர் எஸ் பாரதி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள், நெசவாளர் அணி அமைப்பாளர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு