செய்யாறு அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
X

சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு வந்தவாசி சாலையில் அன்னபுத்தூர் சாலை பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து. இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரியாக குடிநீர் வினியோக படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் செய்யாறு வந்தவாசி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஒன்றிய குழுத்தலைவர் திலகவதி ராஜகுமார், வட்ட வளர்ச்சி அலுவலர் ஆகியோர் வந்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!