வெண்குன்றம் பெரிய ஏரி நிரம்பியது; மக்கள் மகிழ்ச்சி

வெண்குன்றம் பெரிய ஏரி நிரம்பியது; மக்கள் மகிழ்ச்சி

மழையால் சேகமடைந்த சாலையை சீரமைத்த போலீசார்.

Veeranam Lake Water Level Today -வெண்குன்றம் பெரிய ஏரி நிரம்பியதை அடுத்து விவசாயிகள், கிராம மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Veeranam Lake Water Level Today -திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வெங்குன்றம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக நிரம்பியுள்ளது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 3.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரி நிரம்பி நீர் வழிந்தோடியது. இதை அடுத்து வெண்குண்டம் ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமி வேலு தலைமையில், கிராம மக்கள் அந்த ஏரியில் தேங்காய் உடைத்தும் பூ துாவியும் பூஜை செய்தனர். மேலும் அங்கு இருந்தவர்களுக்கு, இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள தூசி மாமண்டூர் ஏரி திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரி மொத்தம் 13.88 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் கொள்ளளவு 1799 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் தூசி பகுதியில் 1650 ஏக்கரும், மாமண்டூர் பகுதியில் 141 ஏக்கரும், பள்ள மதத்தின் மூலம் 1067 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றனர். ஒருமுறை ஏரி நிரம்பினால் நான்கு போகம் நெல் பயிர் சாகுபடி செய்யலாம்.

தற்போது பெய்த கனமழையால், ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் தூசி, முட்டம், பல்லாவரம் கனி கிளிப்பை , மாமண்டூர் , வடகல்பாக்கம், நரசமங்கலம், கீழ்நாயகன் பாளையம் , சோசியம்பாக்கம், வாகை, பகவந்தபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 4118 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் அந்த பகுதி, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆவணியாபுரம் தடுப்பணையிலிருந்து 4,600 கனஅடி நீர் வெளியேற்றம்

ஜவ்வாதுமலை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே கலசபாக்கம் பகுதியிலும், ஆவணியாபுரத்திலும் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது வெள்ளம் காரணமாக தடுப்பணை நிரம்பி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இந்த நிலையில் ஆவணியாபுரம் பகுதியில் உள்ள தடுப்பணையிலிருந்து 4 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தடுப்பணையில் 15 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்வதை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்

ஏரிகள் நிரம்புவதை செய்யாறு அணைக்கட்டு இளநிலை பொறியாளர் பார்த்திபன் (பாசனம்) மற்றும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மழையால் சேதம் அடைந்த சாலை; சீரமைத்த போலீசார்

செய்யாறு நகரில் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே ஆற்காடு மற்றும் ஆரணி சாலை குண்டும் குழியுமாகத்தான் இருந்தது. இந்த நிலையில் மழையால் இந்த சாலைகள் சேதம் அடைந்தது. நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடுமையான சிரமத்தை சந்தித்தனர்.

இந்நிலையில் நேற்று செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் ஆற்காடு சாலை மற்றும் ஆரணி சாலையில் முரம்பு மண் கொட்டி பள்ளங்களை சீரமைத்தனர். போலீசாரை அந்த வழியாக சென்றவர்கள் பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Read MoreRead Less
Next Story